என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பியபோது 4-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி
- சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஷரவன் (வயது10). இவர், அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று சுதந்திர தினவிழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாணவர் ஷரவன் தனது சைக்கிளில் தேசியக்கொடி கட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்றார். விழா முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்குள்ள சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவர் ஷரவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.