என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு 13 ஆண்டு ஜெயில்- போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவு
- கடந்த 2016-ம் ஆண்டு சிறுமிக்கு பிடித்த சாக்லெட் மற்றும் பணம் கொடுத்து ஆசை காட்டி பூசாரி நடராஜன் பழகினார்.
- பூசாரி நடராஜன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
ராயபுரம்:
மண்ணடியை சேர்ந்தவர் நடராஜன்(62). கோவில் பூசாரி. அவரது கோவிலுக்கு அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அடிக்கடி வந்தாள். சிறுமி கோவிலில் சிறு, சிறு பணிகளை செய்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுமிக்கு பிடித்த சாக்லெட் மற்றும் பணம் கொடுத்து ஆசை காட்டி பூசாரி நடராஜன் பழகினார். பின்னர் அவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவுசெய்து பூசாரி நடராஜனை கைதுசெய்தார்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நடராஜனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.