என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்- செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
    X

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்- செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

    • மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.
    • வழக்கு விசாரணை செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது.

    இதையடுத்து நீதிபதி தமிழரசி அளித்த தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலாஜிக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    Next Story
    ×