என் மலர்
உள்ளூர் செய்திகள்

திரிபுராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி விற்ற 4 பேர் கைது
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த முகமது மசூத், கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நெற்குன்றத்தை சேர்ந்த பரத் ஆகிய 3 பேரை கைது போலீசார் செய்தனர்.
- பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சத்யரஞ்சன் என்பவரையும் பிடித்தனர்.
போரூர்:
போரூர் அடுத்த லட்சமி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த முகமது மசூத், கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நெற்குன்றத்தை சேர்ந்த பரத் ஆகிய 3பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் படி பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சத்யரஞ்சன் என்பவரையும் பிடித்தனர். அவர்கள் திரிபுரா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






