என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக 52 பேர் பாதிப்பு- முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா
    X

    புதிதாக 52 பேர் பாதிப்பு- முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதத் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தினார்கள். இருப்பினும் முஞ்சிறை, குருந்தன்கோடு யூனியன்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதிப்பு அதிகரித்தது.

    தோவாளை, தக்கலை, ஒன்றியங்களிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரபடுத்தப்பட்டது. தினசரி பாதிப்பு 100 என்று இருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

    நேற்று முழுவதும் 951 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 52 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதில் 26 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள்.

    இதில் குழந்தைகள் 2 பேரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் 2-வது முறையாக அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    Next Story
    ×