என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் ஒரே மாதத்தில் முட்டை விலை 95 காசுகள் உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் ஒரே மாதத்தில் முட்டை விலை 95 காசுகள் உயர்வு

    • 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது.
    • கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே மாதத்தில் 95 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:- சென்னை-550, ஐதராபாத்-480, விஜயவாடா-505, பர்வாலா-467, மும்பை-535, மைசூர்-550, பெங்களூரு-545, கொல்கத்தா-565, டெல்லி-489, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.127 ஆகவும், இதே போல முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.96 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    Next Story
    ×