search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகளிடம்  வாக்குவாதம் செய்த மது பிரியர்கள்
    X

    கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த மது பிரியர்கள்

    • கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இருந்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடையில் மூடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டன.
    • டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தன.

    மேலும் மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது என அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைக்க வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இருந்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடையில் மூடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டன.

    கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நேற்று மாலை கடலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கோட்ட கலால் அலுவலர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் மது விலை குறித்து விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? அங்கு பணிபுரியும் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்களா? என்பதை அதிரடியாக சோதனை செய்தனர்.

    மேலும் அங்கு திரண்டு இருந்த மது பிரியர்கள் மற்றும் போதையில் இருந்த மது பிரியர்களிடம் அதிகாரிகள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த மதுபிரியர்கள், மது பாட்டில் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இது போன்ற சமயத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள் நாங்கள் மதுபாட்டில் உடனடியாக வாங்கிச் செல்ல வேண்டும். கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை திருத்த போகிறீர்களா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மீண்டும் அதிகாரிகள் விசாரணை தொடர முயன்றபோது நாங்கள் உடனடியாக மது பாட்டில்கள் வாங்க வேண்டும் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என தெரிவித்தனர். அப்போது மனக்குமுறலுடன் அவர்கள் நலனுக்காக தானே விசாரணை செய்ய வந்தோம். ஆனால் இங்கு தலைகீழாக அனைத்து செயல்களும் உள்ளன என அதிகாரிகள் கூறிக் கொண்டு சென்றனர்.

    Next Story
    ×