என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 30-ந்தேதி தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
    X

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 30-ந்தேதி தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

    • மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள சைதன்யா திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கழகப் பிரதிநிதிகள், கழக அணிகளின் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதிக்கு வாழ்த்து, பூத் கமிட்டி அமைத்தல், கழக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கழக வளர்ச்சி ஆகிய 4 பொருள்களில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×