search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது- கலெக்டர் அறிவிப்பு
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது- கலெக்டர் அறிவிப்பு

    • மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும்.
    • தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்பும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ் நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    விருதினை பெறுவதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின், அவர்கள் 10.6.2023 மாலை 5 மணிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (https://awards.tn/gov.in) விண்ணப்பித்தும் மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை, கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×