என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உயர்ரக சொல்போன்களை திருடிய நபர் கைது
  X

  செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உயர்ரக சொல்போன்களை திருடிய நபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை ராமாபுரம் மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்.
  • செல்போன்களை பறிமுதல் செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

  செங்கல்பட்டு:

  சென்னை ராமாபுரம் மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ஜோசப் ஆல்வின் வயது (42). இவர் ஊர்ஊராக சென்று மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து அங்கு மக்களோடு மக்களாக கலந்து செல்போன்களை திருடுவதை தனது தொழிலாக வைத்துள்ளார்.

  இந்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவிக்காக வரும் உறவினர்கள் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கும்போது அவர்களோடு பேச்சு கொடுத்து நட்பாகி அங்கேயே தூங்குவது போல் நடித்து அவர்கள் தூங்கிய பிறகு செல்போன்களை திருடியுள்ளார். அதில் சென்னை சோழிங்கநல்லூர் அண்ணாதெருவை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் கந்தன் என்பவரது போனை திருட முயற்சித்தபோது கந்தனிடம் ஜோசப் ஆல்வின் கையும் களவுமாக பிடிபட்டார். உடனடியாக செங்கல்பட்டு டவுன் நிலையத்தில் தகவல் அளித்து ஜோசப்ஆல்வினை ஒப்படைத்தார். அவரை விசாரித்த போலீசார் அவரிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×