search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் ரேஷன் கடைகளில் மத்திய குழுவினர் திடீர் ஆய்வு
    X

    கல்பாக்கம் ரேஷன் கடைகளில் மத்திய குழுவினர் திடீர் ஆய்வு

    • டெல்லியில் இருந்து மம்தா ஷங்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொருட்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் இந்த கடையில் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? அளவுகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ரேஷன் பொருட்களை எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரு சில ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை எனவும், எடை அளவு சரியாக இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் இருந்து மம்தா ஷங்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பொருட்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் இந்த கடையில் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? அளவுகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டிருந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் பொருட்களின் அளவு சரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    பின்னர் ரேஷன் பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கே கீழே சிந்தி கிடந்த பொருட்களை பார்த்து இதை பொதுமக்களுக்கு வழங்க கூடாது எனவும், ரேஷன் கடையினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அவர்களுடன் காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட பதிவாளர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×