என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது கட்டிட தொழிலாளி- போலீசார் விசாரணை
    X

    மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது கட்டிட தொழிலாளி- போலீசார் விசாரணை

    • மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளியை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி.

    இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் மாடுகளை தோட்டத்தில் கட்டி வைப்பதற்காக சென்றார்.

    அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 25 வயது வாலிபர் வந்தார். அவர் திடீரென தான் அணிந்து இருந்த வேட்டியால் மூதாட்டியின் முகத்தை கட்டினார். பின்னர் அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

    வீட்டுக்கு சென்ற மூதாட்டி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது மனைவியை ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசில் மூதாட்டியின் கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

    மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளியை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×