என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே பள்ளி பெண் ஊழியரிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது
    X

    ஊத்துக்கோட்டை அருகே பள்ளி பெண் ஊழியரிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை தலையாரி தெருவை சேர்ந்தவர் முனி ரத்தினம்.
    • சீதஞ்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை தலையாரி தெருவை சேர்ந்தவர் முனி ரத்தினம். இவரது மனைவி பாரதி (வயது50) சீதஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 16-ந் தேதி மாலை சீதஞ்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் பாரதி கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் தாலி செயினை பறித்து தப்பி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து பாரதி பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (40) என்று தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்தனர். இவர் ஆந்திராவில் பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ரமேசை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த னர்.

    Next Story
    ×