என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்ற வாலிபர் கைது
- மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியை மேற்கொண்டனர். அகரம் ஏரிக்கரை அருகே சென்றபோது டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக ஒருவர் அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின்படி, அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






