என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

    • பருத்தி சூதாட்டம் நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பருத்தி சூதாட்டம் நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில்,நேற்று ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ஆரணி பஜார் வீதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.எனவே, போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர்,அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரம்பாக்கம்,பாரதியார் தெருவை சேர்ந்த நாகராஜ்(வயது32) என்று தெரியவந்தது. மேலும், அவரிடம் ரொக்கப்பணம் ரூ.320 மற்றும் வெள்ளை பேப்பர்கள் 10 உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும்,அவர் பருத்தி என்னும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். எனவே அவரை கைது செய்து

    காவல் நிலையம் கொண்டு வந்தனர்.பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். மேலும், அவரது உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×