என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலந்தூர் மண்டல 10 தெருக்களை சென்னையுடன் இணைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
- ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட தெருக்களை சென்னை மாவட்டத்திற்குள் சேர்க்க வேண்டும்.
- ராஜா தெரு, வடக்கு ராஜா தெரு உட்பட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் சிறப்புமுகாம் நடைபெற்றது. இதில் கோட்ட அலுவலர் சாய் வர்த்தினி, தாசில்தார் தியாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
அப்போது பொதுமக்கள் அளித்த மனுவில், ஆலந்தூர் மண்டலம், 160, 161-வது வார்டில் உள்ள லஸ்கர் தெரு,ஆசர்கானா தெரு, ராஜா தெரு, வடக்கு ராஜா தெரு உட்பட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதி மக்கள் மட்டும் பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்து ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட தெருக்களை சென்னை மாவட்டத்திற்குள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
Next Story






