search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

    • காவலாளியிடம் இருக்கும் சாவியை ஆனந்த் வீட்டில் வேலை செய்யும் பெண் வாங்கி சென்று பணி முடிந்ததும் மீண்டும் கொடுத்து செல்வார்.
    • கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவர் காலையில் வேலைக்கு செல்லும் போது தனது வீட்டு சாவியை அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் கொடுத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி காவலாளியிடம் வீட்டு சாவியை கொடுத்து விட்டு ஆனந்த் பெங்களூர் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து ஆனந்த் வடபழனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

    காவலாளியிடம் இருக்கும் சாவியை ஆனந்த் வீட்டில் வேலை செய்யும் பெண் வாங்கி சென்று பணி முடிந்ததும் மீண்டும் கொடுத்து செல்வார். இதைத் தொடர்ந்து கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×