என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
- சின்னதம்பி வெளியூருக்கு சென்றிருப்பதை மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
- சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜா கடை மாட்டுண்ணி பகுதியில் சின்னதம்பி (வயது 67) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். இவரது மனைவியின் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
சிகிச்சையை முடித்து கொண்டு இருவரும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து சின்னதம்பி மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னதம்பி வெளியூருக்கு சென்றிருப்பதை மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
பின்னர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.