என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரவாயலில் 17 வயது சிறுமி கடத்தல்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
- கடந்த 2-ந்தேதி வேலைக்கு புறப்பட்டு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
- மாயமான மகளை மீட்டு தருமாறு சிறுமியின் பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போரூர்:
மதுரவாயல், பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் 17 வயது மகள் 11-ம் வகுப்பு படித்துள்ளார். அவர் தேர்ச்சி பெறாததால் படிப்பை நிறுத்திவிட்டு கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார்.
அப்போது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஷாம் சுந்தர் (வயது22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வேலைக்கு புறப்பட்டு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாயமான மகளை மீட்டு தருமாறு சிறுமியின் பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் ஷாம் சுந்தர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷாம் சுந்தரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.