search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13,917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13,917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர் என்று கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் தெரிவித்தார்.
    • மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலை பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினரும், செயலாளருமான காஞ்சிபுரம் மாவட்ட பொது தேர்வு கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    தேர்வுகள் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும் மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும் தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு விதிகளை அனைத்து அலுவலர்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகள் புகார்கள் இன்றி நடைபெறும் அளவில் ஏற்பாடுகளும், மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுதும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

    வரும் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 114 மாணவ -மாணவியர்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ மாணவியர்களும் எழுத உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×