என் மலர்

  தமிழ்நாடு

  தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் 1.22 கோடி பேர் உள்ளனர்
  X

  தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் 1.22 கோடி பேர் உள்ளனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போடாமல் அதிகம் பேர் உள்ள மாவட்டமாக மதுரை உள்ளது.
  • அங்கு 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் இதுவரையில் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

  சென்னை:

  தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது. இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது.

  அந்த வகையில் நேற்று வரை ஒரு கோடியே 65 லட்சத்து 12 ஆயிரத்து 625 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் நிலுவையில் உள்ளனர். முதல் தவணையே போடாமல் 42 லட்சத்து 97 ஆயிரத்து 452 பேர் உள்ளனர். 2-வது தவணை ஒரு கோடியே 22 லட்சத்து 15 ஆயிரத்து 173 பேர் போடுவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

  பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் இதுகுறித்து கூறியதாவது:-

  தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போடாமல் அதிகம் பேர் உள்ள மாவட்டமாக மதுரை உள்ளது. அங்கு 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் இதுவரையில் தடுப்பூசி போடாமல் உள்ளனர். சென்னையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும், கன்னியாகுமரியில் 2 லட்சத்து 97 ஆயிரம் பேரும், திருப்பத்தூரில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 124 பேரும், ராணிப்பேட்டையில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 151 பேரும் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

  சென்னையில் 2-வது தவணை 12 லட்சத்து 7 ஆயிரத்து 733 பேரும், கோவையில் 7 லட்சத்து 39 ஆயிரம் பேரும், கடலூரில் 5 லட்சத்து 88 ஆயிரம் பேர், திருப்பூரில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர், மதுரையில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர், சேலத்தில் 5 லட்சத்து 4 ஆயிரம் பேர், செங்கல்பட்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×