என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொள்ளாச்சியில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  X

  பொள்ளாச்சியில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
  • கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

  பொள்ளாச்சி:

  பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 10 டிஎம்சி வரை தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.

  தமிழகத்தில் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, கோவை திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த திட்டம் இருந்து வருகிறது.

  மேலும், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்திற்கு பாசனத்துக்கும் குடிநீருக்கும் இந்த திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

  ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

  இந்த திட்டத்தை கோவை திருப்பூர் மாவட்டவிவசாயிகள் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள்கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

  ஏற்கனவே விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் பெரியசாமி, மணிகண்டன், கார்த்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

  500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், திட்டத்தை கைவிடக் கோரியும், திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் படுவதுடன் இரண்டு மாவட்ட குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  Next Story
  ×