என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
சிறுத்தையை பிடிக்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை -சாலை மறியல்
- நாமக்கல் வனசரக அலுவலர் பெருமாள் தலைமையில் கண்காணிப்பு காமிரா மற்றும் டிரோன் காமிரா மூலமும், கூண்டு அமைத்தும் 40- க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சிறுத்தை புலியை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்க கோரி சுண்டப்பனை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட முயன்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சூர்யாம்பாளையம், வெள்ளாளபாளையம் மற்றும் சுண்டப்பனை பகுதிகளில் சிறுத்தைப்புலி தாக்கி பசுகன்று, நாய், ஆடுகள் ஆகியவற்றை கொன்று போட்டது.
அதனை தொடர்ந்து நாமக்கல் வன சரக அலுவலர் பெருமாள் தலைமையில் கண்காணிப்பு காமிரா மற்றும் டிரோன் காமிரா மூலமும், கூண்டு அமைத்தும் 40- க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்தியூரில் இருந்து 6 சிறப்பு பயிற்சி பெற்ற வனக்காவலர்கள் வரவ ழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு, சிறுத்தை புலியை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்க கோரி சுண்டப்பனை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறுத்தைப் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு இரவு பரபரப்பு ஏற்பட்டது.






