search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணுக்கு பன்றி காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கை தீவிரம்
    X

    கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள்.

    பெண்ணுக்கு பன்றி காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கை தீவிரம்

    • ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி, கொசுக்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் காய்ச்சல் குறையவில்லை.அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார்.

    இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என்று கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

    பன்றிக்கா ய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மாங்கனாம்பட்டு கிராமத்துக்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சுந்தரம், வெங்கட்பிரசாத், பவித்திரன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ்,

    துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஊழியர்கள் சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி அப்பகுதியில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், கொசுக்களை அழிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×