என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுவாமிமலையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
சுவாமிமலையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்- கூட்டத்தில் தீர்மானம்
- 9 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் பேரூராட்சி வரவு, செலவு கணக்குகள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றம்.
சுவாமிமலை:
சுவாமிமலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் உஷா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சுவாமிமலை பேரூராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளான நாகக்குடி, திருவலஞ்சுழி, பாபுராஜபுரம், வலையப்பேட்டை, மாங்குடி ஆகிய ஊராட்சிகளை இணைத்து தரம் உயர்த்தி சுவாமிமலை பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு 9 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் பேரூராட்சி வரவு, செலவு கணக்குகள் தொடர்பான தீர்மா னம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.