search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் வெயிலை சமாளிக்க நுங்கு விற்பனை அமோகம்
    X

    சென்னையில் வெயிலை சமாளிக்க நுங்கு விற்பனை அமோகம்

    • சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.
    • சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது.

    தற்போது வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.

    வெயிலை சமாளிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பாக விற்பனையும் அதிகரித்து வருகிறது. தர்பூசணி பழங்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டப்பட்டு சென்னையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையின் பல பகுதிகளிலும் மதிய வேளையில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

    மணலி, விச்சூர், ஆரம்பாக்கம் ஆகிய இடங்களில் விளையும் நுங்குகளை சென்னைக்கு கொண்டு வந்து அன்னக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது நுங்கு வரத்தொடங்கியுள்ள நிலையில் நுங்கின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது.

    8 நுங்கின் விலை ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் நுங்கை வாங்கி செல்கிறார்கள்.

    Next Story
    ×