என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை
- பெண்ணுக்கு இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம்.
- சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி, ராமாபுரம் கண்டிகை கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் தனலட்சுமி(வயது43) ஆவார். இப்பெண்ணுக்கு இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது வயிற்று வலி ஏற்பட்டதாம். இதனால் மணமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தனலட்சுமியின் தந்தை சாரங்கன் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு பரிசோதித்தபோது தனலட்சுமி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து சாரங்கன் நேற்று மதியம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.






