என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர், இளைஞரணி தலைவர் திடீர் விலகல்
    X

    மதுரையில் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் ஜெயவேல், இளைஞர் அணி தலைவர் பாரிராஜா மற்றும் தே.மு.தி.க. வடக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.ஆர்.செல்வக்குமார் ஆகியோர் விலகி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தபோது எடுத்தபடம். அருகில் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், டாக்டர் சரவணன், அண்ணாதுரை, திரவியம் குமார், சண்முகவள்ளி, சுகந்தி, அசோக் உள்ளனர்.

    பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர், இளைஞரணி தலைவர் 'திடீர்' விலகல்

    • மதுரையில் பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர், இளைஞரணி தலைவர் திடீரென விலகி செல்லூர்ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
    • அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா மாவட்ட துணை தலைவர் ஜெயவேல், மதுரை மாநகர் பா.ஜனதா இளைஞரணி தலைவர் பாரி மற்றும் ஆதரவாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந் தவர்கள் 50 பேர் இன்று மதுரை பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து சால்வை அணிவித்து அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜெயவேல், பாரி ஆதரவாளர்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தனர். அப்போது பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவில் இருந்து விலகிய ஜெயவேல் கூறிய தாவது:-

    எனது வளர்த்து ஆளாக் கிய தாய்க் கழகத்தில் என்னை மீண்டும் இணைத்து கொண்ட அண்ணன் செல் லூர் ராஜூ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது தான் எனது மனது ஆறுதல் அடைந்துள் ளது. கழகத்தின் பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியா ரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் களப்பணியை ஆற்றுவேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    மதுரையில் பா.ஜனதா வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×