search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவு நீரால் மாணவர்கள் அவதி
    X

    சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

    சாலையில் தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவு நீரால் மாணவர்கள் அவதி

    • துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி கிராமம். இங்கு உள்ள தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, மசூதி தெரு, போயர் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளின் வீடுகளில் உள்ள சாக்கடை கால்வாய் நீர் தாழ்வான பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் , அரசு துவக்கப் பள்ளி அருகே நெடுஞ்சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது.

    இதனால் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்:-

    கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த சாக்கடை மழை பெய்யும் பொழுதும், சாதாரண நேரத்திலும் சாலையில் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், நெடுஞ்சாலை துறையினர், ஊராட்சி மன்றம் போன்ற இடங்களில் பலமுறை முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் பள்ளி குழந்தைகள் துர்நாற்றத்தோடு மூக்கை அடைத்தபடி பள்ளிக்குச் செல்லும் நிலை நீடிக்கிறது. ஏற்கனவே தொற்றுநோய் ஊர் முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் இந்த சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    எனவே பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டத் துவங்கி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை உடனடியாக வடிகால், தரைப்பாலம் அமைத்து கொடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×