search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்த தஞ்சை மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள்
    X

    தஞ்சை மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்த தஞ்சை மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள்

    • மாணவர்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட வேண்டும்.
    • அனைவரையும் சமத்துவமாக கருதி சகோதர எண்ணத்துடன் மட்டுமே பழகுவேன்.

    தஞ்சாவூர்:

    சமீப காலமாக உயர்கல்வி நிறுவனங்களில் தீண்டாமை கொடுமைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்நிலையில், ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சையில் உள்ள மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள் "தீயை விட தீமை, தீண்டாமை" என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறைபாடு டையோர் பள்ளி மாணவர்களும், அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவர்களும் சேர்ந்து, 12-ம் வகுப்பு மாணவர் ராமச்சந்திரன் தலைமையில் 'மாணவர்களாகிய நான் யாரையும் எந்த வித பாகுபாட்டுடன் நடத்தாமல் அனைவரையும் சமத்துவமாக கருதி சகோதர எண்ணத்துடன் மட்டுமே பழகுவேன்' என உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில்:-

    மாணவர்கள் அனைவரும் யாரிடமும் தீண்டாமையை கடைபிடி க்காமல் அனைவரிடமும் நல்லிணக்கத்துடன் செயல்பட்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தஞ்சாவூர் பள்ளி மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றனர்.

    நிகழ்ச்சியில் அரசு செவி த்திறன் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் சக்ரவர்த்தி, அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் சோபியா மாலதி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம் உள்ளி ட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×