என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே கல்லூரி விடுதியில் மாணவர்கள் மோதல்
- வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.
- காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது.
வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.அதுபோல் குப்பக் குறிச்சியை சேர்ந்த மாணவர்களும் இதே விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் விடுதியில் மின்விளக்கை போடுவது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விடுதி காப்பாளர் சம்பந்தப்பட்ட மாண வர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் வெளியிலிருந்து நண்பர்களை வரவழைத்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன், தாசில்தார் சுப்புலட்சுமி, பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீதாராமன், மார்த்தாண்ட பூபதி கல்லூரி சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






