என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் மோதி மாணவன் பலி
    X

    பலியான மாணவன் சுவேதன்.

    டிராக்டர் மோதி மாணவன் பலி

    • கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர்.
    • டிராக்டர் பின்னோக்கி வந்ததில் சுவேதன் மீறி ஏறி இறங்கியது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள கீழ நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன்- வனிதா தம்பதியினரின் இரண்டாவது மகன் சுவேதன் (வயது 14).

    இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுவேதன் வீட்டில் இருந்த நெல் மூட்டை ஏற்றிய டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கீழநெம்மேலி பாலத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக கீழே இறங்கினார்.

    அப்போது பாலத்தின் இறக்கம் என்பதாலும் பிரேக்கை சரியாக பயன்படுத்தாத காரணத்தினாலும் டிராக்டர் பின்னோக்கி வந்ததில் சுவேதன் மீறி ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுவேதன் இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×