search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி  வாகைவிளையில் 122.54 ஏக்கரில் புதிய குளம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் கோரிக்கை மனு கொடுத்த போது எடுத்தபடம்.

    உடன்குடி வாகைவிளையில் 122.54 ஏக்கரில் புதிய குளம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

    • புதிய குளம் அமைக்க இந்துஅறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைந்து குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
    • மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தமிழக மீனவர்நலம், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதிய குளம்

    விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளஉடன்குடி வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் கடல்நீர் உட்புகுந்துள்ளதால் உப்பு நீராக மாறியுள்ளது.நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிட புதிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட வாகைவிளையில் 122.54 ஏக்கர் பரப்பளவு திருச்செந்துர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

    நிலத்தடி நீர்

    இந்த நிலத்தில் குளம் அமைத்து மீன் வளர்த்து, சுற்றியுள்ள கிராமபகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்தி குடிநீர் பிரச்சனை, விவசாயத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் புதிய குளம் அமைக்க இந்துஅறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைந்து குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அவருடன் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து விரைவில் புதிய குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    Next Story
    ×