search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலத்தில் ஸ்டார் விற்பனை அமோகம்
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலத்தில் ஸ்டார் விற்பனை அமோகம்

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    அன்னதானப்பட்டி:

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. மேலும் வருகிற ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்க தயாராக உள்ளனர். இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த தால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு முதல் மிகவும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். அதேபோல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, அதனை மின்விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதனைக் குறிக்கும் விதமாக வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டுள்ளனர்.

    சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்ஷன், 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புத்தகக் கடைகள், அழகு சாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ரூ.50 , ரூ.60 முதல் ரூ.2500 வரை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் வடிவங்களுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன, என்றார்.

    Next Story
    ×