என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சிக்கனம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சங்கர்நகர் பள்ளியில் மின் சிக்கனம் குறித்த விளையாட்டு போட்டி
- விளையாட்டின் மூலம் எல்.இ.டி. பல்ப் பயன்படுத்துதல், நட்சத்திர குறியீடு பொருட்கள் பயன் படுத்துதல், குளிர் சாதன பெட்டி பயன்படுத்தும் முறை, சூரிய ஆற்றல் மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
- மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின் பாதுகாப்பின் மூலம் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதனை மாணவ-மாணவிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
நெல்லை:
சென்னை சிட்சன் கன்ஸ்யுமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் மற்றும் சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆற்றல் கழகம் சார்பில் மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின் பாதுகாப்பு குறித்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் கணேசன் போட்டியை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன், ஆற்றல் கழக பொறுப்பாளர்கள் கணபதி சுப்பிரமணியன், தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டின் மூலம் எல்.இ.டி. பல்ப் பயன்படுத்துதல், நட்சத்திர குறியீடு பொருட்கள் பயன் படுத்துதல், குளிர் சாதன பெட்டி பயன்படுத்தும் முறை, சூரிய ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின் பாதுகாப்பின் மூலம் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதனை மாணவ-மாணவிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஆலோசனைகளை சுமணா, வர்ஷா ஆகியோர் செய்திருந்தனர்.






