என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
- ஆடு, மாடு, கோழி ,மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
- புத்தாண்டையொட்டி இந்த உணவகத்துக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் புகார் செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் வள்ளிபுரத்தில் தாபா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது .இங்கு ஆடு, மாடு, கோழி ,மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது .
புத்தாண்டையொட்டி இந்த உணவகத்துக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் புகார் செய்தனர். இது போல் பணத்துக்காக சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்காதீர்கள் எனவும் தெரிவித்தனர்.
அதன் பிறகு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருணிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பெயரில் வட்ட பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உணவகத்தில் நேரடியாக ஆய்வு செய்து கெட்டுப்போன 3 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தார்.
இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக்கோரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக உரிமையாளர் செந்தில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .மேலும் இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெறுகிறது.விசாரணை முடிவில் ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.






