search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் புத்தாண்டையொட்டி நெல்லை கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

    • புத்தாண்டு பிறப்பையொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
    • சோபகிருது வருடப்பிறப்பையொட்டி தமிழ் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ் புத்தாண்டை யொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில்

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை யொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபா டுகள் தொடங்கின. தொ டர்ந்து ஏராளமான பக் தர்கள் குடும்பத்தி னருடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    இன்று மாலையில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் சோமஸ்கந்தர் மண்ட பத்திற்கு எழுந்த ருளிய பின்னர் சோபகிருது வருடப்பிறப்பை யொட்டி தமிழ் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவில் ஜோதிடர் பங்கேற்று கோவிலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து பஞ்சா ங்கம் வாசிக்கப்படு கிறது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    சூரிய ஒளி

    ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும், விநாயகருக்கென தனி ஆலயமும் கொண்ட நெல்லை சந்திப்பு மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடந்தது. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நாயக்க, பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

    அத்தகைய பெருமை மிகுந்த இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக மும், மகா கும்பாபி ஷேகமும் நடைபெற்றது.

    பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    சித்திரை முதல் நாள் தொடங்கி 3 நாட்கள் சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இத்தகைய அரிய நிகழ்வு சித்திரை 1-ம் நாளான இன்று நடைபெற்றது. சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தவுடன் பக்தர்கள் பரவசம் அடைந்து தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகளும் அதனைத் தொடர்ந்து மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    கோபூஜை

    பாளை தெற்கு பஜார் ராஜகோபாலசுவாமி கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பாளை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு கோ பூஜை நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேல வாசல் சுப்பிரமணியசாமி கோவில், தெற்கு பஜாரில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில், தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் காரில் வந்து தரிசனம் செய்து திரும்பினர். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் பரிவார சுவாமி களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மதியம் உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் இன்று காலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×