search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

    • தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும்.
    • ஏப்ரல் 25-ம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளான ஹுப்ளி பெல்காம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பெருவாரியானயாத்திரிகர்கள் தினந்தோறும் வந்து தரிசித்து செல்கிறார்கள்.

    அதேபோல் டெல்டா மாவட்டத்திலிருந்து கர்நாடகப் பகுதிகளில் வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது.

    இதையடுத்து தஞ்சாவூர்- கும்பகோணம் ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்ட 2004-ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் இருந்து பெல்காம் வரை நேரடி ரெயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது.

    இதேப்போல் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரெயில் ஒன்றினை தென் மத்திய ரெயில்வே இயக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8:25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே, தும்கூர் ,கிருஷ்ணராஜபுரம், பைப்பனஹள்ளி (பெங்களூரு), சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும்.

    மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×