search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

     புரட்டாசி மாத 3- வது சனிக்கிழமையை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த காட்சி.

    பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
    • 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது.

    கிருஷ்ணகிரி,

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 18ம் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை (நடு சனி) முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலுக்கு கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோயில், வேலம்பட்டி பெரியமலை கோயில், ஐகொந்தம் கொத்தப்பள்ளி சீனிவாசபெருமாள் கோயில், கிருஷ்ணகிரி தம்மண்ணநகர் பெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    புரட்டாசி முன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது. இதே போல மாவட்டம் முழுவதும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து பெருமாள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கனவாய்ப்பட்டி பெருமாள் கோயில் உள்பட பல கோயில்களில் பக்தர்கள் மொட்டை போட்டு தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×