search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கம்
    X

    வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கம்

    • திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 4 மணிக்கு சென்றடையும்.
    • ரெயில் நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து செல்லும் .

    தஞ்சாவூர்:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06039) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் (திங்கள்கிழமைகளில்) எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 5.40 மணிக்கு சென்றடையும்.

    மறுவழித்தடத்தில் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06040) ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் (செவ்வாய்கிழமைகளில்) வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்துக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில் கொல்லம், தென்மலை, செங்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து செல்லும்.இதேப்போல் திருவனந்தபுரம் சென்ட்ரல்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண். 06020) ஆகஸ்ட் 23, 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய நாட்களில் (புதன்கிழமைகளில்) திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 4 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண். 06019) ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய நாட்களில் (வியாழக்கிழமைகளில் ) வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து செல்லும் .

    மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    Next Story
    ×