search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்குளம் வட்டாரத்தில் 9 கிராமங்களில் சிறப்பு முகாம்
    X

    சிறப்பு முகாம் நடைபெற்ற காட்சி.

    கருங்குளம் வட்டாரத்தில் 9 கிராமங்களில் சிறப்பு முகாம்

    • தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரத்தில் 2022-23 -ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 9 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து புதிய ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, வண்டல் மண் எடுக்க அனுமதி சிறப்பு முகாம் இன்று நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரத்தில் 2022-23 -ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழிகுடி, விட்டிலாபுரம் கோவில் பத்து, ராமானுஜம்புதூர், தாதன்குளம், கீழவல்லநாடு, முறப்பநாடு புதுகிராமம், செக்காரக்குடி, ஆறாம் பண்ணை, கொங்கராய குறிச்சி ஆகிய 9 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து புதிய ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, வண்டல் மண் எடுக்க அனுமதி சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதில் உதவித்தொகை, பட்டா மாறுதல், கண்மாயில் படித்துறை, சுகாதார வளாகம், கழிவு நீர் கால்வாய், சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செக்காரக்குடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம் விதை சான்று உதவி இயக்குநர் சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன் மற்றும் தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, சுகாதார துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுதுறை ஆகிய துறைகளில் இருந்து அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் செய்திருந்தார்.

    Next Story
    ×