search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

    • மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
    • மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்ற வர்களுக்குபல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசால் மாற்றுத்திற னாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் கட்டமாக கும்பகோணம், பூதலூர், சேதுபாவாசத்திரம் ஆகிய 3 ஒன்றியங்களில் 9 இடங்களில் நடைபெற உள்ளது.

    கும்பகோணம் ஒன்றியம் சோழன் மாளிகை முழையூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மையத்தில் வருகிற 21-ந் தேதியும், தேவனேஞ்சேரி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் அடுத்த மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.

    பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 16-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24-ந் தேதியும், செங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-ந் தேதியும் நடைபெறுகிறது.

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகிய நாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 17-ந் தேதியும், பெருமக்களும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25-ந் தேதியும், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடுத்த மாதம் 1ஆம் தேதியும் முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்தறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    எனவே மேற்கூறிய மூன்று ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளை சேர்ந்த இதுநாள்வரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×