என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தபோது எடுத்த படம்.
குமாரபாளையம் அரசு கலை ,அறிவியல் கல்லூரியில் சிறப்புமுகாம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
- துறையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம் தூய்மை செய்தல், வெள்ளையடித்தல், திருவள்ளுவர் நகர், நடராஜா நகர் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், அங்குள்ள மாணவ , மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் துறையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் கிளை நூலகர் சுப்பிரமணியம் பங்கேற்று, கல்வித்துறையில் நூலகங்கள் பங்கு என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் ஞானதீபன், பிரகாஷ், சரவணாதேவி, கீர்த்தி, கண்ணன், காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.






