search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தென்மாவட்ட அளவிலான  ஸ்கேட்டிங் போட்டிகள்
    X

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவன சேர்மன்கள் எ.ஆர்.ஆதி கார்த்திக், எ.ஆர்.கண்ணன் ஆகியோர் கோப்பை, சான்றிதழ்களை வழங்கிய காட்சி.

    நெல்லையில் தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள்

    • 9- வது ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடைபெற்றது.
    • ரிச் ஹவுசிங் அன்ட் பிராப்பர்டீஸ் சேர்மன் எ.ஆர்.ஆதி கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    நெல்லை கலாச்சார கல்வி , விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, நெல்லை ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் ரிச் ஹவுசிங் பிராப்பர்டிஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய தென்மாவட்ட அளவிலான 9- வது ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டிகளை லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை தொடங்கி வைத்தார்.

    ரிச் ஹவுசிங் அன்ட் பிராப்பர்டீஸ் சேர்மன் எ.ஆர்.ஆதி கார்த்திக் முன்னிலை வகித்தார். விவேகா அறக்கட்டளை நிறுவனர் அழகேசராஜா வரவேற்று, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். அறக்கட்டளை தலைவர் அமல் ஆர் தாமஸ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர்கள் ரவிக்குமார், ஸ்டார்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவன சேர்மன்கள் எ.ஆர்.ஆதி கார்த்திக், எ.ஆர்.கண்ணன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்தினர், விவேகா அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.

    விவேகா அறக்கட்டளை அதிசயராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×