search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க விரைவில் நடவடிக்கை-அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
    X

    மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க விரைவில் நடவடிக்கை-அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

    • கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • 5 மாதங்களில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்ததற்கு கோவை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்துயிர் பெரும் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

    கோவை மாவட்டத்தில் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18.12 கோடி திட்ட மதிப்பீட்டில் 9.6 கோடி மானியத்துடன் கூடிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    கோவை சிட்கோ தொழில் பேட்டையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்க அடிக்கல் நாட்டினார்.மேலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவை விமான நிலையம் எதிரே தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு கயிறு வாரிய மேம்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று கோவையை தலைமை இடமாக ஏற்றுக் கொண்டு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    கோவை மேற்கு மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 5 மாதங்களில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்ததற்கு கோவை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை மாவட்டத்திற்கு தனியார் தொழிற்பேட்டை ரூ 18 கோடி மதிப்பீட்டிலும் கயிறு குழுமம் அமைப்பதற்காக ரூ9 கோடி மதிப்பீட்டிலும் தொழிலாளர்கள் தங்குவதற்கு ரூ 22 கோடி மதிப்பீட்டிலும் திட்டங்களை வழங்கி உள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இரு க்கக்கூடிய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிக ரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாநகராட்சி பொது நிதியை எடுத்து கட்டி விட்டு அரசு நிதி ஒதுக்கியது போல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளலூர் பேருந்து நிலையத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற வேண்டும்.

    தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனம் என்பது ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வரக்கூடிய காலங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் இது அதிகரிக்கும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×