என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தாயை அரிவாளால் வெட்டியதால் ஆத்திரம் தந்தையை உருட்டு கட்டையால் தாக்கிய மகன்கள்
- கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டினார்.
- ஆத்திரமடைந்த மகன்கள் தந்தையை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார்.
வேடசந்தூர:
வேடசந்தூர் அருகே உள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் முருகன் (58). மில் தொழிலாளி. இவருக்கு பூங்கொடி (47) என்ற மனைவியும், கலை ராஜா (30) பார்த்தசாரதி (25) என்ற 2 மகன்களும் உள்ளனர். முருகன் எப்பொழுதும் மனைவியின் மீது சந்தேக ப்பட்டு தகராறு செய்து கொண்டே இருந்ததால் பூங்கொடி தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து சுள்ளெறும்பு நால்ரோட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இதில் மூத்த மகன் கலை ராஜாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முருகன் தனது தாயார் பழனியம்மா ளுடன் (72) பழைய கோட்டையில் வசித்து வந்த நிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பாக 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த பூங்கொடியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூங்கொடியை 100 நாள் பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அவர் உயிர் தப்பிய நிலையில் முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்து ள்ளார். இந்நிலையில் முருகன் மீண்டும் மனைவியின் வீட்டிற்குச் சென்று அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தனது தாயை கொடுமைப்படுத்தி கொண்டே இருக்கும் தந்தையின் மீது ஆத்திரமடைந்த மகன்கள் கலைராஜா, பார்த்தசாரதி மற்றும் உறவினர் சதீஷ்(26) ஆகியோர் முருகனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த சுள்ளெறும்பு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்த முருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வேடசந்தூர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். மேலும் முருகனை உருட்டு கட்டையால் தாக்கிய 3 பேரையும் பிடித்து வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இளைஞர்களிடமிருந்து 3 பேரையும் மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.






