search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 கோடி மதிப்பிலான பீடி இலைகள் கடத்தல்-  மீனவர்கள் கைது
    X

    பீடி இலைகளை கடத்திய மீனவர்கள் 

    ரூ.2 கோடி மதிப்பிலான பீடி இலைகள் கடத்தல்- மீனவர்கள் கைது

    • இந்திய கடலோர காவல்படையினர் நடவடிக்கை.
    • 4 படகுகளில் இருந்த 104 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்.

    மன்னார் வளைகுடாவில் வஜ்ரா கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 4 படகுகளை கண்ட அவர்கள் அதனை வழிமறித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள், கடலோர காவல்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர், அவர்களை விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் இரண்டு இந்திய படகுகள் மற்றும் இரண்டு இலங்கை படகுகள் மூலம் பீடி இலையை கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 கிலோ எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் ஒப்படைத்தனர். அந்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×