search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் தென்மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி
    X

    போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்.

    கோவில்பட்டியில் தென்மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

    • சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
    • ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பிடித்தது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி ஆகியவை இணைந்து, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புறச்சூழலை பாது காப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செய லாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் துணைத் தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவங்கி வைத்தார்.

    இதில், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடமும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற அணியினருக்கு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டி யன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.

    Next Story
    ×