என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மானாமதுரை பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் நேர்மையுடன் வாக்களிப்பதாக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    மானாமதுரை:

    மானாமதுரை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வாக்காளர்கள் அனைவரும் நேர்மையுடன் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியானது மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் மங்களேஸ்வரன் தலைமையிலும் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் முன்னிலையிலும் முக்கிய இடங்களான புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம், பார்த்திபனூர் ரஸ்தா, அண்ணாசிலை, காந்தி சிலை, சுந்தரபுரம் கடை வீதி, கன்னார் தெரு, பட்டத்தரசி ஆகிய பகுதிகளிலும் பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்திலும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    இந்த உறுதிமொழியில் முக்கிய அம்சமாக சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தலுக்கு உறுதுணையாகவும், தேர்தலில் பணமோ பொருட்களோ பெறாமலும் நேர்மையாக சிந்தித்து வாக்களிப்போம் எனவும், தேர்தல் விதிமீறல் குறித்த எந்த செயல்கள் பற்றியும் நான் அறிந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து நல்ல முறையில் தேர்தல் நடத்த நான் உடன் படுவேன் எனவும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இந்த உறுதிமொழி நிகழ்ச்சிகளில் பொதுமக்களும், வியாபாரிகளும், தொண்டு நிறுவன உறுப்பினர்களும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும், பேரூராட்சி அலுவலக பணியாளர்களும் துப்புரவு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை துப்புரவு மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. 40 சதவீத பதவிகாலம் முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் நலனுக்காக என்ன செய்தார்?

    தற்போது இருக்கும் முதல்–அமைச்சர் எந்த மாவட்ட தலைநகரத்திற்கும் போனது கிடையாது. எந்த தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்களையும் சந்திப்பது கிடையாது.

    3 முறை முதல்வராக இருந்தும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவர் ஜெயலலிதா. எனவே அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. தேசிய உணர்வுக்கு எதிரானது போல், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. திராவிட உணர்வுக்கு எதிரானது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு முறையான திட்டங்கள் கிடைக்கும் என்று, ஜி.கே.வாசன் கூறினார்.

    சிவகங்கை:

    சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்த வேனில் நின்றபடி காளையார்கோவில் பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், நேர்மையான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்போது தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் முறையாக கிடைக்கும்.

    அதற்கு ஏற்ற நல்ல அரசாங்கம் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி என்று தான் நான் கூறுகிறேன். மதுவில்லா தமிழகம், மாசு இல்லா சுற்றுச்சூழல், ஊழல் இல்லாத வெளிப்படையான அரசு, சாதிகளற்ற தமிழ் சமுதாயம், மோதல் இல்லாத மதச்சார்பற்ற அரசு, வணிகமாகாத கல்வி, கொள்ளை போகாத இயற்கை வளம், கிரானைட் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி, கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி, ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம்.

    விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். தொழிலாளர் நலன் காக்கும் அரசாக நாங்கள் செயல்படுவோம். பின்தங்கிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைத்து படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம். கடந்த 3 நாட்களிலே தமிழக மக்களின் மனநிலை, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் கூட்டாட்சி ஏற்படுத்த வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    இந்தமுறை மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தமுறை வாய்ப்பை நழுவவிட்டால் ஊழலில் இருந்து தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெயலலிதா ஆட்சியில் தமிழக சட்டசபையில் விவாதம் என்பதே கிடையாது. அது பஜனை மடமாகி விட்டது என்று ப.சிதம்பரம் பேசினார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் கோட்டையூர், ஸ்ரீராம்நகர், பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: –

    மக்களை பற்றி சிந்திக்காத, மக்களையே சந்திக்காத ஜெயலலிதாவின் ஆட்சிக்கு இந்த தேர்தலோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயகம் காணாமல் போய்விட்டது. நான்கு சுவருக்குள் இருந்து ஆட்சி நடத்தும் அவருக்கு மக்களின் தேவை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருக்கும்போது, தனது காலடி பூமியில் படாமலேயே காரில் இருந்தவாறே பார்த்து விட்டு சென்றார். இதுதான் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சியின் அடையாளம்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு பணியிடங்களை பதவியேற்ற 3 மாதத்தில் நிரப்புவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.

    கருணாநிதி பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என கூறி உள்ளார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். ஆனால் ஜெயலலிதா மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன் என கூறுவது ஏமாற்று வேலை. மக்களின் காதில் பூ சுற்றும் வேலை.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவி காலம் 40 சதவீதம் முடிந்துவிட்டது. அவர்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என கூற முடியுமா? நான் மத்திய மந்திரியாக பதவி வகித்த காலத்தில் சிவகங்கை தொகுதியில் 19 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கினேன். 74 ஆயிரத்து 281 பேருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க செய்தேன். 74 வங்கி கிளைகளை திறந்தேன். 99 முறை தொகுதிக்குள் வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தேன். தற்போது அப்படி ஏதாவது நடக்கிறதா? சிந்தித்து பாருங்கள்.

    தமிழக சட்டசபை பஜனை மடமாகி விட்டது. விவாதம் என்பதே கிடையாது. முதல்வர் படிக்கும் 110 விதியே நமது தலைவிதியாகி விட்டது. தமிழகத்தில் திறந்த வெளிப்படையான ஜனநாயக ஆட்சி அமைய, கருணாநிதி முதல்அமைச்சராக உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் நேற்று பகலில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. 

    இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் நாட்டரசன் கோட்டை சுற்றுப்பகுதியிலும், சிவகங்கையிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வறண்டு கிடந்த கண்மாய் குளங்களுக்கு வரத்துக்கால்வாய்கள் வழியாக தண்ணீர் வரத்தும் தொடங்கியது.

    இந்த மழை தொடர்ந்து சுமார் 1 மணிநேரம் பெய்தது. கடும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது. மழைக்கு பின்னரும் வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடனேயே இருந்தது. இந்த கோடை மழையால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் வேறு சில பகுதிகளிலும் லேசாக மழை தூறியது.
    திருப்பத்தூரில் மாதர் சங்கத்தினர் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.

    திருப்பத்தூர், மே. 10–

    திருப்பத்தூரில் மாதர் சங்கத்தினர் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.

    சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளராக உள்ளவர் கே.ஆர்.பெரிய கருப்பன். தற்போதைய திருப்பத்தூர் தொகுதி வேட்பாளரான இவரை பற்றி சர்ச்சையான வீடியோ இணையதளத்தில் (வாட்ஸ்அப்பில்) வெளி யானது.

    இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக திருப்பத் தூர் பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. மாதர் சங்கத்தின் சார்பில் 20–க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மதுரை ரோடு, அண்ணாசிலை, தாலுகா அலுவலகசாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

    இவர்களை தடுத்த போலீ சார் தேர்தல் விதிமுறைப்படி அனுமதி பெற்று ஊர்வலம் நடத்த வேண்டும் என்று கண்டித்தனர். அதனை யடுத்து மாதர் சங்கத்தினர் கலைந்து சென்றனர். * * * தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனை கண்டித்து மாதர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    ×