என் மலர்
செய்திகள்

தமிழக சட்டசபை பஜனைமடமாகி விட்டது: ப.சிதம்பரம் பேச்சு
ஜெயலலிதா ஆட்சியில் தமிழக சட்டசபையில் விவாதம் என்பதே கிடையாது. அது பஜனை மடமாகி விட்டது என்று ப.சிதம்பரம் பேசினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் கோட்டையூர், ஸ்ரீராம்நகர், பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
மக்களை பற்றி சிந்திக்காத, மக்களையே சந்திக்காத ஜெயலலிதாவின் ஆட்சிக்கு இந்த தேர்தலோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயகம் காணாமல் போய்விட்டது. நான்கு சுவருக்குள் இருந்து ஆட்சி நடத்தும் அவருக்கு மக்களின் தேவை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருக்கும்போது, தனது காலடி பூமியில் படாமலேயே காரில் இருந்தவாறே பார்த்து விட்டு சென்றார். இதுதான் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சியின் அடையாளம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு பணியிடங்களை பதவியேற்ற 3 மாதத்தில் நிரப்புவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
கருணாநிதி பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என கூறி உள்ளார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். ஆனால் ஜெயலலிதா மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன் என கூறுவது ஏமாற்று வேலை. மக்களின் காதில் பூ சுற்றும் வேலை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவி காலம் 40 சதவீதம் முடிந்துவிட்டது. அவர்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என கூற முடியுமா? நான் மத்திய மந்திரியாக பதவி வகித்த காலத்தில் சிவகங்கை தொகுதியில் 19 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கினேன். 74 ஆயிரத்து 281 பேருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க செய்தேன். 74 வங்கி கிளைகளை திறந்தேன். 99 முறை தொகுதிக்குள் வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தேன். தற்போது அப்படி ஏதாவது நடக்கிறதா? சிந்தித்து பாருங்கள்.
தமிழக சட்டசபை பஜனை மடமாகி விட்டது. விவாதம் என்பதே கிடையாது. முதல்வர் படிக்கும் 110 விதியே நமது தலைவிதியாகி விட்டது. தமிழகத்தில் திறந்த வெளிப்படையான ஜனநாயக ஆட்சி அமைய, கருணாநிதி முதல்அமைச்சராக உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story